பலன்: உண்மை நிலையினை அறிவோம்
நகையே இது, இந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை, மானே முது கண் முடிவுயில், அந்த,
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
பொருள்:
இந்த உலகினை பெற்ற நாயகி அபிராமியின் முலைகள், தாமரை மொட்டு போன்றவை. அவள் கருணை ததும்பும் முதிர்ந்த* கண்கள், மானின் அழகிய கண்கள் போன்றவை. பிறப்பு இறப்பு இல்லாதவள். அதனால், முதலும் முடிவும் இல்லாதவள் நம் அன்னை.
அவளை இப்படியெல்லாம் கவித்துவம் கொண்டு வர்ணிப்பது, சரியல்ல. ஏனென்றால் மான், தாமரை இவை எல்லாம் மிகவும் சிறியவை. சாமானியமானவை. அவற்றைக்கொண்டு மலைமகளான அன்னையை வர்ணிப்பது அவளின் பெருமையை குறைப்பதாகும். அது தனக்கு சிரிப்பை உண்டாக்குகிறது என்று பட்டர் கூறுகிறார்.
* முதிர்ந்த - அன்னை எல்லோருக்கும் பெரியவள். அதனால் அவள் கண்கள் முதிர்ந்தவை. அனைத்தையும் அறிந்த அனுபவம் மிக்க கண்கள் என்பதால், முதிர்ந்த கண்கள் என்று கூறுகிறார்.
பாடல் (ராகம்-பந்துவராளி, தாளம் - --விருத்தம்--) கேட்க