பலன்: ஒரு கொள்கையில் பிடிப்பு உண்டாகும்
பத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உந்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்,
முதல் தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ் நகையே!
பொருள்:
முதல் தேவர் மூவரும் - மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன்
மும்மூர்த்திகள், மற்ற தேவர்கள் யாவரும் போற்றும், அழகிய நகையுடைய அன்னை அபிராமியே, உன்னை பற்றிய ஞானத்தினை பெறுவதற்கே என் சித்தம் விரும்பும்படி வைத்தாய். என் மனம், என்றும் உன் பாதத்தை பற்றுவதிலேயே சிந்திக்கும்படி செய்தாய். என்னை உன் அடிமையாக ஆக்கிக் கொண்டாய். இனி, வேறொரு சமயத்தே நாட்டம் கொள்ள மாட்டேன். அந்த சமயத்தோர் செல்லும் வழியிலும் செல்ல மாட்டேன்.
பாடல் (ராகம் - சுத்த சாவேரி, தாளம் - --விருத்தம் --) கேட்க