No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 91


    பலன்: உயர்ந்த பதவி கிடைக்கும்

    மெல்லிய நுண் இடை மின் அனையாளை, விரிசடையோன்
    புல்லிய மென் முலைப், பொன் அனையாளை, புகழ்ந்து, மறை
    சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
    பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே

    பொருள்:

    மின்னல் போன்ற மெல்லிய இடையினை உடையவள்.
    விரிந்த சடை முடி உடைய சிவபெருமானோடு சேர்ந்து இருப்பவள். மெல்லிய முலை உடையவள்.
    பொன் போல், ஒளி மிகுந்தவள்.

    இப்படி பட்ட அபிராமியை, வேதம் சொன்னவாறு வணங்கும் அடியார்களை வணங்கும் அடியவர்கள் (அடியார்க்கு அடியார்) பெரும் பேறு என்னவென்றால்: பல இசைக்கருவிகள் முழங்க, இந்திரனின் வெள்ளை நிற யானையின் மேல் அமர்ந்து, பலரும் தொழ வலம் வருவார்கள்.

    பாடல் (ராகம்-சுநாத வினோதினி, தாளம் - --விருத்தம் --) கேட்க

    Previous Next

    نموذج الاتصال