No results found

    அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விழிப்புணர்வு பேரணி- அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்


    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிறு தானியங்கள் அற்புத ஊட்டச்சத்து உறைவிடம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ரகுமான் தலைமை தாங்கினார். செல்வம் எம்.பி., செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, முன்னிலை வகித்தனார். மாவட்ட உணவு வழங்கல் துறை அலுவலர் வரவேற்புரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக சிறு தொழில் துறை நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் மறைமலை நகராட்சி நகர மன்ற தலைவர் சண்முகம், வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன், ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்தமிழ் செல்வி விஜயராஜ், பவானி கார்த்தி, வானதி சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال