No results found

    போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு


    அரியலூர் காமராஜர் ஒற்றுமைத் திடலில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் 1000 பேர் உள்ளிட்டோர் போதைப் பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.முன்னதாக, போதைப் பொருள் எதிர்ப்பு விழப்புணர்வு பேரணியானது அரியலூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் ஒற்றுமைத் திடலில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த முழக்கங்களை எழுப்பியும் சென்றனர்.சிறுவளூர்...இதே போல் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அஞ்சலக அலுவலர் அம்சா தேவி கலந்து கொண்டு, போதைப் பழக்கத்தால் மனிதர்களின் வாழ்க்கை பாதை மாறிவிடும் . ஆரம்பத்தில் புத்துணர்ச்சி தோன்றுவது போல் இருந்தாலும் இறுதியில் அவர்களுக்கு தீர்க்க முடியாத புற்றுநோய்களையே உண்டாக்கும். கல்வி கற்கும் பருவத்தில் அத்தகைய பழக்கத்துக்கு ஆளாகாமல் தனது குறிக்கோளை அடைவதை மட்டுமே மாணவர்கள் லட்சியமாக கொள்ள வேண்டும் என்றார். 

    Previous Next

    نموذج الاتصال