கோவை சுந்தராபுரத்தில் கோவை மாநகர காவல் துறை மற்றும் ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோவை மாநகர தெற்கு மண்டல துணை காவல் ஆணையர் சண்முகம் தலைமை தாங்கினார். போத்தனூர் சரக உதவி ஆணையர் கரிகால் பாரி சங்கர், சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை துணை ஆணையர் சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 1500 பேர் கலந்து கொண்டனர்.
பேரணியானது ரத்தினம் கல்லூரி முன்பிருந்து சுந்தராபுரம் சிக்னல் வரை நடைபெற்றது. இதில் ரத்தினம் கல்லூரி தலைமை செயல் அதிகாரி மாணிக்கம், முதல்வர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.