No results found

    செந்தில் பாலாஜிக்கு ஆக.25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு


    போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 7-ந்தேதி காவலில் எடுத்தனர்.

    இன்றுடன் 5 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது, மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். நீதிமன்ற காவல் நீட்டிப்பை அடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

    Previous Next

    نموذج الاتصال