No results found

    உம்மன் சாண்டி உடலுக்கு மரியாதை செலுத்திய விஜய் வசந்த்


    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி (வயது79), புற்றுநோய் பாதிப்புக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை காலமானார். உம்மன்சாண்டியின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து பெங்களூரு இந்திராநகரில் உள்ள அவரது நண்பரும், முன்னாள் மந்திரியுமான டி.ஜான் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் உம்மன் சாண்டியின் உடல் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அவரது இறுதி ஊர்வலத்திலும் விஜய் வசந்த் பங்கேற்றார். ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர்.

    Previous Next

    نموذج الاتصال