No results found

    மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவை வருகிறார்


    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா. கூட்டணி ஆட்சி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவைக்கு வருகை தர உள்ளார். அவரின் வருகையை யொட்டி புதுவை அரசு துறைகள் அனைத்தும் சுறுசுறுப்படைந்துள்ளன. துறைரீதியாக புதிய திட்டங்கள், ஏற்கனவே முடிந்துள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டங்களை நடத்தி பட்டியலை தயாரித்து வருகின்றன. அமைச்சர் தொடங்கி வைக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும் மத்திய நிதித்துறை கேட்டுள்ளது. புதுவைக்கு வரும் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, மாநிலத்தின் நிதி சிக்கல்கள் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக மாநில நிதித்துறை முழுமையான நிதி பிரச்சினைகள் குறித்த அறிக்கையை தயாரித்து வருகிறது. புதுவையை நிதிக்குழு வில் இணைக்க வேண்டும். மாநில சிறப்பு நிதியுதவி திட்டத்தில் புதுவையை இணைத்து ரூ.2 ஆயரித்து 328 கோடி தர வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு 100 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை புதுவை அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال