No results found

    சி.சி.டி.வி.கேமரா பொருத்தப்படும் கலெக்டர் வல்லவன் உறுதி


    நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அதன் பதிவுகளை பார்வையிட்டு அவ்வபோது அறிவிப்புகளை வெளியிட மாநில அளவில் ஒரு சுயதின குழு உருவாக்கபட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த காவல் சித்தரவதைக்கு எதிரான கூட்டியக்கம் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கூட்டியக்கத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் வல்லவன் இது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பெருமாள், ம.தி.மு.க. அமைப்பாளர் கபிரியேல், விடுதலை சிறுத்தை கட்சி புதுச்சேரி தொகுதி பொறுப்பாளர் செழியன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அமைப்பாளர் வக்கீல் பரகத்துல்லா, விடுதலை வேங்கைகள் பெருமாள், திராவிடர் கழகம் அன்பரசன், திராவிடர் விடுதலைக் கழகம் லோகு ஐயப்பன், உள்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Previous Next

    نموذج الاتصال