No results found

    அரசு விரைவு பஸ்களில் தனியார் விளம்பரம் செய்யலாம்


    அரசு விரைவு பஸ்களில், தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதால், மாதந்தோறும் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும்' என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கட்டண உயர்வு இன்றி, முதலீடுகள் இன்றி, வருவாய் பெறும் வகையில், அரசு பஸ்களில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்க உள்ளோம். தற்போது, சென்னை மாநகர பஸ்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் வாயிலாக, மாதம் 1 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. அடுத்த கட்டமாக, 250 விரைவு பஸ்களில், பக்கவாட்டு கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்ய, தனியார் நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம். விரைவில், இதற்கான ஒப்பந்தம் செய்ய உள்ளோம். இதன் வாயிலாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, மாதந்தோறும், 30 லட்சம் ரூபாய் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Previous Next

    نموذج الاتصال