No results found

    மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: எல்லை பாதுகாப்புப்படை வீரர் பலி


    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மத்திய மற்று்ம மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது மெல்ல மெல்ல வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கடந்த வாரம் அமித் ஷா மணிப்பூர் சென்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண் அடையவேண்டும். இல்லையெனில் தேடுதல் வேட்டை நடத்தி, ஆயுதம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள், பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். செரோயு என்ற பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கிளர்ச்சியாளர்களுக்கும், வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர். மே மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. அதில் இருந்து மணிப்பூரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

    Previous Next

    نموذج الاتصال