No results found

    வெயிலின் தாக்கத்தில் நீர் வீணாவதை தடுக்க சோழவரம் ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீர் திறப்பு


    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 6857 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 265 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி. கனஅடி ஆகும். இதில் 693மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    தற்போது கோடை வெயில் அதிகரித்து உள்ள நிலையில் ஏரியில் உள்ள தண்ணீர் வெப்பத்தின் காரணமாக வீணாவதை தடுக்கும் வகையில் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மி.கனஅடி. இதில் 1268 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2173 மி.கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மி.கனஅடியில் 2268 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்த அளவில் தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7768 மி.கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது 6875மி.கன அடி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இப்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال