தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- சமூக நீதியின் தலைநகரான தமிழ்நாட்டை, விளையாட்டு தலைநகராக மாற்றிய முதலமைச்சருக்கு நன்றி. ஹாக்கி வீரர் கார்த்திகேயனுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மாநில விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் 3 லட்சத்து 71 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டை வடக்கில் இருந்து வந்து யாரும் வென்றது கிடையாது. எவரெஸ்ட் சிகரம் ஏறும் முத்தமிழ் செல்விக்கு 15 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ரூ.11 கோடிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறேன். எந்த ஒரு பரிந்துரையும் இருக்காமல், பயிற்சியாளர்கள் வெளிப்படை தன்மையுடன் நேர்மையுடன் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மகளிருக்கான சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
வடக்கிலிருந்து வந்து யாரும் தமிழகத்தை வென்றதில்லை- சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Tamil News