No results found

    ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் துணிகளைப் போடுவது சரியா?


    பகைவரின் ஊரை அழிக்க வேண்டுமானால், முதலில் அந்த ஊரின் நீர்நிலை ஆதாரங்களை அழிக்க வேண்டும். அதன்பின் அந்த ஊர் வெகுவிரைவில் அழிந்து விடும். பழங்கால அரசர்களின் வரலாறுகளும், நீதி நூல்களும் சொல்லும் தகவல் இது. தாயைத் திட்டினாலும் சரி; அடித்தாலும் சரி! அந்தப் பிழையை தாய் பொறுத்துக் கொள்வாள். ஆனால் எல்லா ஜீவராசிகளையும் வாழவைக்கும் நீர்நிலைகளுக்கு, தண்ணீருக்குப் பிழை செய்தால், அது அனைத்தையும் அழித்துவிடும். நீர் கெட்டுப்போய் விட்டது என்றால், அதன்பிறகு மற்ற உயிரினங்கள் எப்படி உயிர் வாழும்? இதைத்தான் 'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே!' என்று சொல்லி வைத்தார்கள் நமது முன்னோர்கள். ஆகையால் பொது நீர்நிலைகளில் துணிகளைப் போடுவது என்பது தவறுதான். 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்.

    Previous Next

    نموذج الاتصال