No results found

    கோவிலில் உடைக்கப்படும் சிதறு தேங்காயை எடுத்து சாப்பிடலாமா?


    கோவிலில் சிலர் சிதறு தேங்காய் உடைப்பார்கள். அந்த தேங்காயை எடுத்து சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். சிதறு தேங்காயை சாப்பிடலாம். இன்னும் சொல்லப்போனால், அது சிறுவர்களுக்கானது. இதை காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள் விவரித்து இருக்கிறார். ஸ்ரீ மகா சுவாமிகளின் வருகையை முன்னிட்டு, சிதறு தேங்காய்கள் உடைத்தார்கள். சிறுவர்கள் பலர், கூடி எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிதறு தேங்காய் உடைப்பவர், சிறுவர்கள் மீது பட்டுவிடப் போகிறதே என்ற எண்ணத்தில், "ஒத்திப் போங்கோடா! ஒத்திப் போங்கோடா!" என்றார். சிறுவன் ஒருவன், "சிதறு தேங்கா ஒடைக்கறதே, எங்களுக்குத்தான? எங்கள வெலகிப் போகச்சொன்னா எப்பிடி?" என்று கேட்டான். சிதறு தேங்காய் சிறுவர்களுக்குத்தான் என்பது நிரூபணமானது.

    Previous Next

    نموذج الاتصال