No results found

    ஆடி காரில் டீ விற்கும் வாலிபர்


    ஆடி காரில் வைத்து வாலிபர் ஒருவர் டீ வியாபாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆடி காருக்கு அருகே டேபிள் ஒன்றை வைத்து வாலிபர் டீ வியாபாரம் செய்கிறார். அந்த டேபிள் மீது அடுப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பார்கோடு போன்றவை வைக்கப்பட்டுள்ளன. காரில் லக்கேஜ்களை வைக்க கூடிய பகுதி திறந்திருக்கிறது. அதில் சில பிளாஸ்குகள் உள்ளது. டீ விற்பனைக்காக இளைஞர் பயன்படுத்தும் கார் ஆடி ஏ6 கார் ஆகும். இது செடான் ரகத்தை சார்ந்தது. இதன் தற்போதைய ஆரம்ப விலையே ரூ.61.60 லட்சம் என ஆகும். இது எக்ஸ் ஷோரும் விலை மட்டுமே. ஆன்ரோடு விலையும் சேர்த்தால் இன்னும் சில லட்சம் கூடுதலாகும். இந்த வீடியோ வைரலாகும் நிலையில் தொழில் யுக்திக்காக இதுபோன்று செய்யலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال