இவற்றில் காவல் ஆணையர், மண்டல ஐஜிகள், டிஐஜிகள், எஸ்பிகள், டிஎஸ்பிகள், ஆய்வாளர்கள், எஸ்ஐகள் உட்பட 1,21,500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 10.50 சதவீதத்துக்கு மேல் மகளிர் போலீஸார் உள்ளனர். ஒவ்வொரு நிலையிலும், சரியான நேரத்தில் பதவி உயர்வு, காலியிடம் நிரப்புதல், பணப்பலன் கிடைத்தல், சலுகை போன்ற காவல் துறையில் நிறைவேறாத கோரிக்கைகள் கிடப்பில் இருப்பதாகவும்,
சட்டப் பேரவையில் நடை பெற உள்ள காவல் துறைக் கான மானியக் கோரிக்கை விவாதத்தில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றும் என எதிர்பார்ப் பதாகவும் தமிழக காவல் துறை ஊர்க்காவல்படையினர் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
20ஆம் தேதி காவல் துறை மானியக் கோரிக்கையில் ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம் செய்து மாதம் முழுவதும் பணி வழங்கப்படும் என முதல்வர் மு.ஸ்டாலின் அவர்கள் 20ஆம் தேதி அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தன்னார்வலர்கள் இருந்தாலும், மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் மாதம் முழுவதும் பணி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்