No results found

    அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்- கனிமொழி


    தூத்துக்குடி மாவட்டத்தில் 4-வது புத்தக கண்காட்சி எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கில் நாளை நடக்கிறது. இதனை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்க உள்ளார். இதனையொட்டி இன்று ராட்சத பலூன்கள் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பலூன்களை பறக்கவிட்டார். இதில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் வினித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவதூறு குற்றச்சாட்டுகளை அள்ளி தெளித்துக்கொண்டு இருக்கிறார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

    Previous Next

    نموذج الاتصال