கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழர்கள் அதிகமாக உள்ள புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அந்த மாநில அவைத் தலைவர் டி.அன்பரசனை வேட்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை அறிவித்துள்ளார். டி.அன்பரசனை எதிர்த்து அந்த மாநில மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் நிறுத்தப்பட்டுள்ளார். இதுபற்றி டி.ஜெயக்குமார் கூறியதாவது:- அ.தி.மு.க. வேட்பாளரை ஆட்சிமன்ற குழு கூடி தேர்வு செய்தது. ஆட்சிமன்ற குழு முடிவின் படி புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். அவர்தான் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆவார். ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்து இருப்பது பற்றி கவலை இல்லை. ஏனெனில் அவர் அ.தி.மு.க.வில் இல்லை. கட்சியிலேயே இல்லாதவர் எப்படி கட்சி வேட்பாளரை அறிவிக்க முடியும்? அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டவருக்கே இரட்டை இலை சின்னமும் கிடைக்கும். ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி அறிவித்தவரே அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்- ஜெயக்குமார்
Tamil News