No results found

    பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் மேலும் 4 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்


    கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட், டுவிட்டர், பேஸ்புக், டிஸ்னி, அமேசான், வால் ஸ்டிரீட் உட்பட பல நிறுவனங்களும் ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளன. இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதை தொடர்ந்து கடந்த மாதம் மேலும் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் தற்போது 3-வது கட்டமாக மேலும் 4,000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மெட்டா ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال