மிதுன ராசி – லாப குரு அஷ்டமா சனி காலம் முடிந்து வெற்றியின் தொடக்கத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு, குருப்பெயர்ச்சியால் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையப் போகிறது. குரு பகவான் 11ஆம் வீட்டுக்கு மாறப் போகிறார். இதனால் வரையில் வாழ்க்கையிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து கோடீஸ்வர யோகத்தோடு திருமண வாழ்க்கை அமையும். சிம்ம ராசி – பாக்ய குரு சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும் குருப்பெயர்ச்சி இதுவாக இருக்கப்போகிறது. பாக்கியஸ்தானத்தில் பயணம் செய்யப் போகும் குரு பகவான் , அற்புதமான பண வரவோடு இனிமையான வாழ்க்கை துணையை உங்களுக்கு கண் முன்னே நிறுத்துவார். சனி பகவான் பார்வை சிம்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் விழுவதால் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்படும் எனினும் குரு பகவான் ஆசியோடு திருமணம் நடைபெறும்.
துலாம் ராசி – களத்திர குரு குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு மாறி உங்கள் ராசியை பார்வையிடுகிறார். இதனால் வரை ஜென்மத்தில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் இருந்து திருமண தடை ஏற்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குரு பார்வை கிடைப்பதால் கட்டாயம் திருமணம் நடந்தே தீரும். தனுசு ராசி – பூர்வ புண்ய குரு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டது , ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு மாறப்போகிறார் குரு பகவான். குருவின் பார்வை ஒன்பதாம் இடத்திற்கு கிடைக்கப் போவதால், காதல் திருமணம் கைகூடவும், நீங்கள் விரும்பிய பெண்ணை மனம் முடிக்கவும் வாய்ப்புகள் வந்து சேரும். தனுசு ராசிக்காரர்களுக்கு அமோகமான திருமண வாய்ப்பு ஏற்படும்.
கும்ப ராசி – தைரிய குரு கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம், எனினும் ஏழாம் வீட்டில் குரு பார்வை விழுவதால், பல பிரச்சனைகள் வந்தாலும் திருமணம் தடை பெறாது. திருமணம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அமைப்பு கும்ப ராசிக்காரர்களுக்கு உள்ளது. மீன ராசி - குடும்ப குரு 2023 குருப்பெயர்ச்சியின் போது குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு செல்கின்றார். ராசிநாதனாகிய குரு பகவான் ஆசி இருப்பதால் மீன ராசிக்காரர்கள் ஏழரை சனியை நினைத்து கவலைப்பட வேண்டியது இல்லை. குரு பகவான் குடும்ப ஸ்தானத்துக்கு செல்வதால், இது வரையில் இருந்த திருமண தடை நீங்கும். கட்டாயம் மீன ராசிக்காரர்களுக்கு 2023 குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் திருமணம் நடந்தே தீரும்.