No results found

    மூலிகை பெட்ரோல் தயாரித்து ரூ.15-க்கு பொதுமக்களுக்கு வழங்குவேன்: ராமர் பிள்ளை


    போலி பெட்ரோல் தயாரித்ததாக கைது செய்யப்பட்டு விடுதலையான ராமர்பிள்ளை ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 1999-ம் ஆண்டு மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து முறையான அனுமதி பெற்று விற்பனை செய்தேன். ஆனால் அது மூலிகை பெட்ரோல் அல்ல, போலி பெட்ரோல் என வழக்கு தொடரப்பட்டது. தற்போது என் மீதுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபித்துள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் விரைவில் மூலிகை பெட்ரோல் ஆலை தொடங்கப்படும். அதில் மூலிகை பெட்ரோலை தயாரித்து பொதுமக்களுக்கு லிட்டர் ரூ.15-க்கு வழங்க முடியும். புதிய ஆலை தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளனர். இன்னும் 40 நாட்களில் ஆலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சட்ட ஆலோசகர் சொக்குசாமி பாலசுப்பிரமணியன், சித்த மருத்துவர் கூடலிங்கம், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Previous Next

    نموذج الاتصال