No results found

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து


    தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதைப்போல விஷு, பைசாகி, பிஹு என பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பைசாகி, விஷு, பிஹு, நபா பர்ஷா, வைஷாகாதி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான இந்த தருணத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال