No results found

    இங்கிலாந்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் இந்திய விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை தேவை- பிரதமர் மோடி


    இங்கிலாந்தில் சமீப நாட்களாக காலிஸ்தானி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த உரையாடலின்போது, "இங்கிலாந்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் இந்திய விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ரிஷி சுனக்கை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அத்துடன் இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் இந்திய பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்தும் நடவடிக்கையின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பைசாகி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு அழைப்பும் விடுத்தார்.

    Previous Next

    نموذج الاتصال