தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதை தொடர்ந்து அவர் பேசியதாவது:- * தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 400-ஐ நெருங்கியுள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். * அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. * தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். * தமிழகம் முழுவதும் பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும். * மாஸ்க் அணிவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும். * மருத்துவ குழு அமைத்து வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். * மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க வேண்டும். * கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு- கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி
Tamil News