No results found

    கலாஷேத்ரா விவகாரம்: பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை


    சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தற்போது இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி 6 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஐ.ஜி. தலைமையிலான அதிகாரிகள் இன்று கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் 2 டி.எஸ்.பி.க்கள், பெண் காவல் ஆய்வாளர் உட்பட 4 அதிகாரிகள் கலாஷேத்ராவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال