No results found

    மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு- உச்சநீதிமன்றம் அதிரடி


    மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடரும் வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்கள் நல பணியாளர்கள் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளர்களாகவே தொடர்வார்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறி உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال