No results found

    கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி: புலிகேசி நகர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு


    கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. தங்கள் விருப்பத்தை கூட்டணி கட்சியான பாஜகவிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாஜக வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியான நிலையில், அதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளாக அன்பரசன் போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகேசி நகர் தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அ.தி.மு.க.வுக்கு சீட் ஒதுக்காமல் பாஜக கைவிரித்து விட்டதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 20ம் தேதி நடக்கும் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கர்நாடக தேர்தல் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال