No results found

    150 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முழு சூரிய கிரகணம்


    150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நாளை நடக்கிறது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. இந்த கிரகணம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விளக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து முதன்மை விஞ்ஞானி எபினேசர் கூறியதாவது:- நாளை (20ந் தேதி) நடக்கும் பூரண சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அடுத்த முழு சூரிய கிரகணம் 2172-ம் ஆண்டுதான் வரும். எனவே பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை கண்டு கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    Previous Next

    نموذج الاتصال