பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது நினைவு நாள் இன்று. உழைப்பின் உருவம் அவர். தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் மகன் என்றாலும், தமது இதழியல் பயணத்தை அச்சுக்கோர்ப்பதில் இருந்து தொடங்கி அடுத்தடுத்தக் கட்டங்களை எட்டியவர். அனைத்து நிலைகளிலும் பயணித்தவர் என்பதால் தான் பணியாளர்களின் உழைப்பை உணர்ந்தும், மதித்தும் ஏற்பளித்தார். கல்விக்காகவும், ஆன்மிகத்திற்காகவும் கணக்கின்றி அள்ளி அள்ளிக்கொடுத்தவர். அவரது கொடைகள் தலைமுறைகளையும், நூற்றாண்டுகளையும் கடந்து நினைவு கூரப்படும். அவர் மறைந்து பத்தாண்டுகள் ஆனாலும், அவருடன் பழகிய நினைவுகள் மறக்கவில்லை. மக்களுக்கும், சமூகத்திற்கும் அவர் செய்த கொடைகளையும், சேவைகளையும் அவரது நினைவு நாளில் நாம் போற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது கொடையையும், சேவையையும் போற்றுவோம்- ராமதாஸ் புகழாரம்
Tamil News