No results found

    வாஸ்து பற்றிய பொதுவான விதிகள்


    வாஸ்து சாஸ்திரப்படி வீடு மற்றும் பணி புரியும் இடம் இருப்பது நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்தது. பலரும் இப்போது கேட்கின்ற கேள்வி, வாஸ்து பற்றின பொதுவான விதிகளை சொல்லுங்கள் என்பதே! வாஸ்து பொதுவான விதிகள்:- குபேர மூளை என சொல்லப்படும் தென்மேற்கு பகுதி உயரமாக இருக்க வேண்டும். அந்த மூலையில் கனமான பொருட்களை வைக்கலாம். அந்த மூலையில் சாளரம் இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டின் தலைவர் புழங்கும் இடமாக, விலை உயர்ந்த பொருட்களை வைக்க கூடிய இடமாக இந்த தென்மேற்கு மூலை இருக்கும். ஈசான மூலை என சொல்லப்படும் வடகிழக்கு பகுதி சற்றே தாழ்வாக இருந்தாலும் பரவாயில்லை. வளர்ந்திருப்பது நன்மை. கனமான பொருட்களை இங்கே வைக்கக் கூடாது. இறைவன் உறையும் இடம் என்பதால் சுத்தமாக இருக்க வேண்டும். நறுமணம் தரும் பொருட்களை இங்கே வைக்கலாம்.

    வீட்டின் தலை வாசல் உச்சத்தில் இருக்க வேண்டும் வடக்கு பார்த்த வாசல் அல்லது கிழக்கு பார்த்த வாசல் இருப்பது நலம். வீட்டுமனையும் அதில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடமும் சதுர வடிவம் அல்லது செவ்வக வடிவமாக இருப்பது சிறப்பு. அவ்வாறு கட்டும் போது வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் காலியிடம் விட்டு கட்டலாம். குழந்தைகள் விளையாடுவதற்கும் வயதானவர்கள் மாலை நேரங்களில் நடப்பதற்கோ வாகனங்களை நிறுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தென்கிழக்கு பகுதியான அக்னி மூலையில் சமையலறை இருக்க வேண்டும். கிழக்கை நோக்கி பார்த்த வண்ணம் சமையல் செய்பவர்கள் நின்று சமையல் செய்யும்படி சமையல் மேடை இருப்பது நலம். வாயு மூளை என சொல்லப்படும் வடமேற்கு மூளையில் குளியலறை மற்றும் கழிவறைகள் வைக்கலாம்.

    Previous Next

    نموذج الاتصال