No results found

    எனக்கும் அந்த கொடுமை நடந்தது... தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய டெல்லி மகளிர் ஆணைய தலைவி


    டெல்லியில் இன்று மகளிர் ஆணையம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் சிறுமியாக இருந்தபோது, அவரது தந்தை அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். "நான் சிறுமியாக இருந்தபோது எனது தந்தை என்னை அடிக்கடி அடிப்பார். என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அவர் வீட்டுக்கு வரும்போது நான் பயந்துபோய் கட்டிலுக்கு அடியில் மறைந்துகொள்வேன். பயத்துடனேயே கழித்த பல இரவுகளை இன்றும் நினைவுகூர்கிறேன். இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது என்று இரவெல்லாம் யோசித்திருக்கிறேன்" என்றார் ஸ்வாதி மாலிவால். விருது பெற்ற பெண்களின் போராட்டம் தனது சொந்த போராட்டத்தை நினைவூட்டியதால், இந்த நிகழ்வு தன்னை உணர்ச்சிவசப்படச் செய்ததாக ஸ்வாதி மாலிவால் கூறினார். நான்காம் வகுப்பு படிக்கும் வரை தந்தையுடன் வசித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல் பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் சிறுமியாக இருந்தபோது தந்தையால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال