இந்த கண்காட்சியை அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பத்து நாட்களுக்கு மேலாக ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இவருடன் அமைச்சர் சேகர் பாபு , நடிகர் யோகிபாபு ஆகியோர் உடனிருந்தார்கள்.
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, " முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்று தான். 55 ஆண்டுகாலமாக அவர் பொது வாழ்க்கையில் ஈடுப்பட்டிருக்கிறார். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர். " என்று கூறினார். பின்னர் இந்த கண்காட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் புத்தகம் ஒன்றில் தனது கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.