No results found

    அயோத்தி ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தரிசனம்


    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும். அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ்சரி மகாராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராமர் கோவில் கட்டும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2024 ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்பட்டு பக்தர்கள் வழிபடுதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்கும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் எங்கள் வேலையை செய்துள்ளோம் என தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال