No results found

    இங்கிலாந்தில் 400 ஆண்டு பழமையான ஹோட்டலில் தீ விபத்து


    இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியது. தகவலறிந்து சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال