சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதிலளித்து கூறியதாவது: கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்ள மொத்த சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் ரூ.4,183 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து ரூ.3,642 கோடியும், தமிழ்நாட்டில் இருந்து ரூ.2,695 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. பாஸ்டேக் முறை அறிமுகமானபின் சுங்கச்சாவடி ஊழியர்களை பணிநீக்க மத்திய அரசு உத்தரவிடவில்லை. சுங்கச்சாவடியை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 4,934 ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் - நிதின் கட்கரி
Tamil News