No results found

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு- நாளை அவசரமாக விசாரிக்கிறது ஐகோர்ட்


    அதி.முக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு சார்பாக மனோஜ்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினமான நாளை காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நாளையுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال