No results found

    சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 16 டெஸ்ட் தொடர் வெற்றி - இந்தியா அசத்தல்


    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த தொடரில் 25 விக்கெட் மற்றும் 86 ரன் எடுத்த அஸ்வின், 22 விக்கெட் மற்றும் 135 ரன் எடுத்த ஜடேஜா ஆல் ரவுண்டர்களாக முத்திரை பதித்து தொடர் நாயகன் விருதை பகிர்ந்து கொண்டனர் இதன்மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். கடைசியாக 2012-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது. அதன் பிறகு உள்ளூரில் இந்தியாவின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. அதேபோல, சவால்மிக்க அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக ருசித்த 4-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். 2017, 2018-19, 2020-21 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா இதே போன்று 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை போட்டுத் தாக்கியிருந்தது. இதில் 2 முறை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்த வரலாற்று சாதனையும் அடங்கும்.

    Previous Next

    نموذج الاتصال