No results found

    கர்நாடகத்தில் மோடி சுனாமி வீசுகிறது - முதல் மந்திரி பசவராஜ் பொம்மை


    பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 6 முறை கர்நாடகத்திற்கு வந்து சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி மிகப் பெரிய தலைவர். அவர் இந்தியாவை உயர்ந்த நிலையில் நிறுத்தியுள்ளார். சர்வதேச எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். கொரோனா நெருக்கடி காலத்தில் ஏழை மக்களுக்கு மோடி உதவினார். நானும், மந்திரி சோமண்ணாவும் பழைய நண்பர்கள். நாங்கள் உப்பள்ளியில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினோம். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து விவாதிக்கவில்லை. சோமண்ணா எங்கள் கட்சியை விட்டு விலக மாட்டார். கர்நாடகத்தில் மோடி சுனாமி வீசுகிறது என குறிப்பிட்டார்.

    Previous Next

    نموذج الاتصال