No results found

    சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை... ஒரு மாதத்தில் இரண்டாவது சம்பவம்


    சென்னை ஐஐடி-யில் பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த அந்த மாணவர் அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவருக்கு அவரது படிப்பில் கவனம் செலுத்துவது மற்றும் பாடங்களை படித்து முடிப்பதில் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சென்னை ஐஐடியில் ஒரு மாதத்தில் இரண்டாவது மாணவர் தற்கொலை செய்துள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி முதுகலை மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் தறகொலை செய்தது குறிப்பிடத்தக்கது. மாணவர் இறப்பு குறித்து ஐஐடி சென்னை ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளது. மேலும், ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال