No results found

    என்னால் மட்டுமே மூன்றாம் உலகப் போரைத் தடுக்க முடியும்: பிரசாரத்தில் துணிச்சலாக முழங்கிய டிரம்ப்


    அமெரிக்காவின் அயோவா மாநிலம் டேவன்போர்ட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டு பேசியதாவது:- உலகத்திற்கு இப்போது இருப்பதைவிட ஆபத்தான காலம் இருந்ததில்லை. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷியாவை சீனாவின் கரங்களுக்குள் தள்ளியிருக்கிறார். இன்று உங்கள் முன் நிற்கும் நான் மட்டுமே, மூன்றாம் உலகப் போரைத் தடுப்பதற்கு உறுதியளிக்கும் ஒரே வேட்பாளர். ஏனென்றால் நீங்கள் மூன்றாம் உலகப் போரை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நான் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒரு சிறந்த நட்புறவைக் கொண்டுள்ளேன். ரஷிய அதிபர் எனது கோரிக்கையை கேட்பார். மேலும் தீர்வு காண்பதற்கு எனக்கு ஒரு நாளைக்கு மேல் ஆகாது. இரு கட்சிகளிலும் வேரூன்றிய அரசியல் வம்சங்கள், விரும்பத்தகாத சிறப்பு நலன்கள், சீனாவை விரும்பும் அரசியல்வாதிகள் மற்றும் முடிவற்ற வெளிநாட்டுப் போர்களின் ஆதரவாளர்களால் அமெரிக்க வாக்காளர்கள் வெறுப்படைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال