No results found

    மகளிர் பிரீமியர் லீக் - மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வெற்றி


    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 51 ரன்கள் குவித்தார். யஸ்திகா பாட்டியா 44 ரன்களும், நாட் சீவர் பிரண்ட் 36 ரன்களும் சேர்த்தனர். குஜராத் சார்பில் ஆஷ்லி கார்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிம் கார்த், தனுஜா கன்வார், சினேஹ் ராணா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. மும்பை அணியின் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்லின் தியோல் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. மேலும் மும்பை தான் ஆடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال