நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை பெற்றது. இந்த படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆவணப்படத்தில் நடித்த மூதாட்டி பெள்ளிக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தியில், நீங்கள் நடித்த ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். உங்களால் தமிழ்நாட்டிற்கே பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு பெள்ளியும் நன்றி தெரிவித்து கொண்டார். முன்னதாக கூடலூர் எம்.எல்.ஏ. ஜெயசீலன் நேரில் சென்று பெள்ளிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.