No results found

    அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு 5 மாநிலங்களில் இருந்து போதைப்பொருள் சப்ளை- தேசிய குழந்தைகள் ஆணையர் பேட்டி


    விக்கிரவாண்டி குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையர் டாக்டர். ஆனந்து இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் ஆசிரமத்தில் உள்ள 2 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கலெக்டர் பழனி முன்னிலையில் வருவாயத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் இது குறித்து தேசிய குழந்தைகள் ஆணையர் டாக்டர். ஆனந்து நிருபர்களிடம் கூறியதாவது:- சாலையோரத்தில் பிச்சை எடுத்தவர்கள், அனாதையாக சுற்றியவர்களை ஆசிரமத்திற்கு அழைத்து வந்து கை, கால்களை உடைத்து காப்பகத்தில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு போதைப் பொருள் வழங்கி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இந்த போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 அறைகளுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் 60 பேரை தங்க வைக்க மட்டுமே அனுமதி பெற்று 140 பேரை தங்க வைத்தது மனித நேயத்திற்கு அப்பாற்பட்டது. இதே போல பெங்களூர் காப்பகத்திலும் ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கும் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். மேலும், இவர்கள் 5 மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக தனி விசாரணை நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال