இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 15 ஆயிரத்து 786 ஆக உயர்ந்தது. தொற்றின் பிடியில் இருந்து நேற்று 1,390 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 69 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்றை விட 1,699 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 15,208 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,852 பேர், மகாராஷ்டிராவில் 3,016 பேர், குஜராத்தில் 2,247 பேர், கர்நாடகாவில் 1,037 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று குஜராத், கோவாவில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட இறப்புகளில் 3-ஐ கணக்கில் கொண்டு வந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 867 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று நாடு நாடு முழுவதும் 1,18.694 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவதால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3,094 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிப்பு நேற்று 3 ஆயிரத்தை தாண்டி இருந்தது. அதாவது நேற்று 3,016 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 694, கேரளாவில் 654, குஜராத்தில் 381, டெல்லியில் 295, கர்நாடகாவில் 288, தமிழ்நாட்டில் 123, அரியானாவில் 115, இமாச்சலபிரதேசத்தில் 124, கோவாவில் 108 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.