No results found

    நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னையில் பாராட்டு விழா


    ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சென்னையில் அவருக்குப் பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 'மனிதம் காத்து மகிழ்வோம்' என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொள்கிறார்கள். வருகிற 26-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் இந்த விழாவிற்காக ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கடந்த சில நாட்களாகச் சென்னை மேயர் பிரியாவை சந்தித்து அனுமதி கேட்டு அதற்கான திட்டமிடல்களைத் தெரிவித்து அனுமதியும் வாங்கியிருக்கிறார்கள்.

    இதேபோல சென்னை காவல் ஆணையரகத்தில் விழா நடப்பதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சேதங்களைத் தவிர்க்க முன்பணமாகப் பெரிய தொகையையும் ரசிகர்கள் சார்பில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்தும் 10 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி 47 வருடங்களாக மக்களை மகிழ்வித்து வருவதையொட்டி அவருக்காக நடக்கும் பாராட்டு விழாவில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணராவ் கெய்க்வாட், கலைப்புலி எஸ்.தாணு, ஏ.சி.சண்முகம், சு.திருநாவுக்கரசர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ். ரவிகுமார், சைதை. சா.துரைசாமி உட்பட திரையுலகினர் பலர் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال