இந்தோனேஷியா நாட்டில் நடைபெறும் ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, பாலி நகரில், இந்திய சமுதாயத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே நெருங்கிய கலாச்சார, நாகரீக தொடர்புகள் உள்ளன. பாலி ஜத்ரா என்ற மிகப் பழமையான பாரம்பரியம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் வர்த்தக தொடர்பை பிரதிபலிக்கிறது. இந்திய சமுதாயத்தினர், தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் இந்தியாவின் பெருமையையும், அந்தஸ்தையும் உலக அளவில் அவர்கள் உயர்த்தி வருகின்றனர். இந்தியா இந்தோனேஷியா உறவை வலுப்படுத்துவதிலும் இந்திய சமுதாயத்தினர் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பம், நிதி, சுகாதாரம், தொலைத் தொடர்பு, விண்வெளித் துறை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. தற்சார்பு இந்தியாவின் தொலை நோக்கு பார்வை உலக நலனுக்கானது. மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள, வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டிலும், குஜராத்தில் நடைபெற உள்ள பட்டத் திருவிழாவிலும் இந்தோனேஷியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Google Tamil News
India
indian community
indonesia
modi
play
pm
Relationship
role
strengthening
very important