No results found

    அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி - சீன அதிபருடன் திடீர் சந்திப்பு | Google Tamil News


    இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று முக்கிய சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்தனர். இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு மூலோபாய கூட்டுறவை வலுவாக்குதல், குவாட் கூட்டமைப்பில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

    இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்த அமெரிக்க அதிபர் பைடனின் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்தனர். மேலும், ஜி20 மாநாட்டில் இரவு உணவு விருந்தின்போது பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பரம் ஒருவொருக்கொருவர் வணக்கம் செலுத்திக்கொண்டு நலம் விசாரித்தனர். எனினும் இரு தலைவர்களுக்கும் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு குறித்து எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை.

    Previous Next

    نموذج الاتصال