No results found

    Google Tamil News | மெய்க்காவலருக்கு வெள்ளித் தாரை இசைக்கருவி மற்றும் பதாகை- குடியரசுத் தலைவர் இன்று வழங்குகிறார்


    குடியரசுத்தலைவரின் சொந்த படைப்பிரிவான மெய்க்காப்பாளர் பிரிவு, இந்திய ராணுவத்தில் குடியரசுத்தலைவரின் வெள்ளியாலான தாரை மற்றும் அதற்கான பதாகையை பெறுகின்ற தனித்துவம் மிக்க ஒரே படைப்பிரிவாகும். இந்நிலையில் குடியரசுத்தலைவர் மாளிகையின் முன்பகுதியில் உள்ள வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவரின் மெய்க்காவலருக்கு வெள்ளியாலான தாரை இசைக்கருவியும், அதற்கான பதாகையும், வழங்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கௌரவிக்கிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இந்த விழாவில், வெள்ளியாலான தாரை மற்றும் அதற்கான பதாகையை குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர் பெற்றுக் கொள்வார். இதைத் தொடர்ந்து இந்த இசைக்கருவியும், பதாகையும் வழங்கப்படுவதன் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒளி, ஒலி காட்சி இடம் பெறும். இந்த சிறப்புக் காட்சியை www.presidentofindia.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து நேரடியாக பார்வையிடும் அனுமதியை பெறலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال